தனுஷ் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழக்கூடிய நடிகரான தனுஷ் இரண்டு தேசிய விருதுக்கு சொந்தக்காரராக இருக்கின்றார். மேலும் தமிழில் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று பிரபலமான நடிகராக வலம் வருகின்றார்.
தற்போது வாத்தி படத்தின் மூலம் நேரடி தெலுங்கு படத்திலும் அறிமுகமாகவுள்ளார் தனுஷ். இந்நிலையில் கடந்தாண்டு திரையுலகை பொறுத்தவரை தனுஷிற்கு வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்தது எனலாம். தொடர் தோல்விகளினால் தவித்து வந்த தனுஷ் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பினார்.
AK62: AK62 பஞ்சாயத்து…வசமாக சிக்கிக்கொண்ட அஜித்..கொஞ்சம் கஷ்டம் தான் போலயே..!
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் தற்போது தனுஷின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான வாத்தி திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய தனுஷ், வாத்தி கதையை இயக்குனர் வெங்கி எனக்கு லாக்டவுன் காலகட்டத்தில் தான் கூறினார். அப்போது எனக்கு வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்தேன். கதையை கேட்டுவிட்டு பிடிக்கவில்லை என சொல்லலாம் என்று தான் முதலில் நினைத்தேன்.
ஆனால் வாத்தி படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்தது. அதன் காரணமாக இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றார் தனுஷ். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் வாத்தி திரைப்படம் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.