தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.
இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி அன்று நாமக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு வழங்க இருக்கின்றன. அதன்படி, இந்த முகாம் பாவை பொறியியல் கல்லூரியில் பிப். 18 காலை 8 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்்என தெரிவிக்கப்பட்டுள்ளது.