ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருபவர்களில் முதன்மையில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இருக்கிறார். பாஜக தூக்கி வங்க கடலில் எரிய வேண்டும் எனக்கூறியவர், பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாம் முன்னணியை உருவாக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.
அந்தவகையில் ஹைதராபாத்தில் உள்ள கம்மம் நகரில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற பாரதிய ராஷ்டிர சமிதியின் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கேரள முதல்வர், சிபிஎம் பினராயி விஜயன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஐயின் டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய அரசியலில் கேசிஆர் முன்னேறுவதை ஆதரித்து வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்டி குமாரசாமி, கர்நாடகாவில் பஞ்சரத்ன ரத யாத்திரை (மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம்) மேற்கொண்டு வருவதால் அவர் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என கூறினார்.
நான்கு முதல்வர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்ட உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: “நேற்று பா.ஜ.க.வின் (தேசிய நிர்வாகி) கூட்டம் முடிந்தது. இன்னும் 400 நாட்கள் எஞ்சியிருப்பதாக அவர்களே கூறினர். இந்த அரசு தனது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. 400 நாட்களுக்குப் பிறகு அது நிலைக்காது’’ எனறு அவர் கூறினார்.
கேசிஆர் மேலும் ஒரு நகர்வை செய்தார். ஒடிசாவின் முன்னால் முதல்வர் கிரிதர் காமாங் மற்றும் அவரது மகன் சிஷிர் காமாங் உடன் இன்று மேடையை பகிர்ந்து கொண்டார். ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தெற்கு ஒடிசாவின் பழங்குடி தலைவரும், முன்னாள் முதல்வருமான கிரிதர் காமாங் கலந்து கொண்டார். தெலுங்கு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளின் முக்கிய தலைவர் பாஜகவில் இருந்து விலகிய பின்பு கேசிஆருடன் கைகோர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு பாஜகவுடனான கூட்டணியை முறித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்திரசேகர ராவ் சந்தித்தபோது, “மூன்றாம் முன்னணி என்ற கேள்விக்கு இடமில்லை. காங்கிரசை உள்ளடக்கிய ஒரு முன்னணி இருக்க வேண்டும். அதன் பிறகு 2024-ல் பாஜகவை வீழ்த்தலாம்” என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.
இந்தநிலையில் தெலங்கானாவிற்கு வெளியே கேசிஆர் ஒரு பேரணியை இன்று நடத்தியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாந்தெட்டில் பேரணியை நடத்திய சந்திரசேகர ராவ் கூறும்போது, ‘‘மகாராஷ்டிராவில் அனைத்து தேர்தலும் எங்கள் கட்சி போட்டியிடும். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, விவசாயிகள் தேசத்தின் ஆட்சியைப் பிடிக்க வேண்டிய நேரம் இது.
அதனால்தான இந்த முறை விவசாயிகளுக்கான அரசு என்று நாங்கள் முழக்கமிடுகிறோம். நாம் ஒன்றுபட்டால், அனைத்து சாத்தியம் தான். நம் நாட்டில், விவசாயிகள் 42 சதவீதத்திற்கு மேல் உள்ளனர். மேலும் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் சேர்த்தால் அது 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும்.
களமிறங்கும் “கர்நாடக சிங்கம்”… காங்கிரசுக்கு செக் வைக்க பக்கா பிளான்?
இது அரசாங்கத்தை அமைக்க போதுமானது. இன்று, நேரம் வந்துவிட்டது. 75 ஆண்டுகள் என்பது நீண்ட காலம். விவசாயிகளும் எழுதவும், விதிகளை உருவாக்கவும் முடியும்” என்று அவர் கூறினார். நாந்தெட் பகுதியில் தேர்தல் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், நாந்தேட்டில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் உள்ளனர். முன்னதாக, அண்டை மாநிலத்தில் உள்ள திட்டங்களைக் கருத்தில் கொண்டு தெலுங்கானாவுடன் இணைக்க அனுமதிக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள சில கிராமங்கள் கோரிக்கை விடுத்தன என்பது குறிப்பிடதக்கது.