செங்கல்பட்டு அருகே, திருமணம் செய்ய மறுத்து தாக்கிய காதலனை போலீசில் சிக்க வைப்பதற்காக, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக நாடகமாடி, பெண் பொய் புகார் அளித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த தன்னை, நான்கு பேர் கொண்ட கும்பல், காரில் கடத்தி கொண்டுபோய் சாலவாக்கம் பகுதியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசாரிடம் பெண் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்த விசாரித்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், அந்த பெண் ஒரு நபருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்ததால், பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, உண்மையை கூறியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் டெலி காலராக வேலை பார்க்கும் அந்த பெண், உத்திரமேரூரை சேர்ந்த சலீம் என்பவரை காதலித்த நிலையில், சனிக்கிழமை இரவு, காதலனுடன் சாலவாக்கம் வந்தபோது, திருமணம் குறித்து ஏற்பட்ட தகராறில், சலீம் அவரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது.
பொய்புகார் அளித்த பெண்ணை போலீசார் எச்சரித்துள்ள நிலையில், அவரை தாக்கியதால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சலீமை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.