நடிகர்களை தலைவர் என்று அழைப்பது நெருடலாக உள்ளது – வெற்றிமாறன் கருத்து

விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக இயற்றியுள்ள வெற்றிமாறன் தற்போது அந்த படத்தின் இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை மார்ச் மாதத்திற்கு பிறகு அவர் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ‛தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை' என்ற நிகழ்ச்சியில் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும். நான் எனது குழந்தைகளுக்கு சாதி இல்லை என்ற சான்றிதழ் வாங்க முயற்சி எடுத்தேன். ஆனால் தர முடியாது என்று கூறி விட்டார்கள். அதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றபோதும் சாதி இல்லை என்ற சான்றிதழ் கொடுக்க முடியாது. நீங்கள் சாதியை குறிப்பிட்டு ஆக வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்கள் என்று கூறிய வெற்றிமாறன், பள்ளி கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும். எனக்கு சாதி தேவையில்லை என்று நான் கருதுகிறேன் என்று கூறினார்.

அதோடு அவரிடத்தில் கேட்கப்பட்ட இன்னொரு கேள்விக்கு, ‛நடிகர்களை தலைவர் என்று சொல்வது வருத்தமளிக்கிறது. முன்பு நடிகர்கள் அரசியலுடன் சம்பந்தப்பட்டவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை. அதனால் நடிகர்களை தலைவர் என்று அழைப்பது கொஞ்சம் நெருடலாக உள்ளது' என்று தெரிவித்தார் வெற்றிமாறன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.