ரஜினிகாந்த் பட தயாரிப்பாளர் பாபுஜி மரணம்..!!

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளராக வலம் வந்தவர் பாபுஜி. இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காளி மற்றும் கர்ஜனை படங்களை தயாரித்தார். அதேபோல் கின்னஸ் சாதனைக்காக தமிழில் தயாரான சுயம்வரம் திரைப்படத்தையும் தயாரித்தார்.அந்த திரைப்படம் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் சாதனையை நிகழ்த்தியது.

இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பாபுஜி காலமானார். அவருக்கு திரைப்பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பின்னணி பாடகி வாணி ஜெயராம், டைரக்டர் டி.பி.கஜேந்திரன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து மறைவால் சினிமா உலகமே சோகத்தில் மூழ்கி மூழ்கி உள்ள நிலையில் அடுத்ததாக திரைப்படத் தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி காலமானார்..

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.