ஆண்ட்ரியா இசை நிகழ்ச்சி ஹைலைட்ஸ்: "இதுவரை இல்லாத உணர்விது…"- மெய்மறந்த மதுரையன்ஸ்!

மதுரையில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் புதிய திட்டத் தொடக்க விழாவில் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியையும் நடத்தினார் நடிகை ஆண்ட்ரியா. அவரின் பாடல்களும், பாடிய விதமும் மதுரை மக்களைக் கொண்டாட வைத்தது.

மதுரை மக்கள் நாட்டுப்புற மக்கள் இசையை மட்டுமல்ல, கர்னாடக இசை, மெல்லிசை, துள்ளிசை, கானா, கஸல், கவாலி என அனைத்து இசையையும் ரசிப்பவர்கள், மேற்கத்திய இசையை ரசிக்க மாட்டார்களா என்ன? அதிலும் ஆண்ட்ரியா போன்ற பிரபல திரைக்கலைஞர் பாடும்போது கேட்கவா வேண்டும்.

ஆண்ட்ரியா

படைப்பாளிகளை, கலைஞர்களைக் கொண்டாடும் மக்கள் நிறைந்த மதுரை மண்ணில் ஆண்ட்ரியாவின் இசையைக் கேட்க ரசிகர்கள் குவிந்தனர்.

செலிபிரிட்டி பேண்டோடு இணைந்து ஆண்ட்ரியா என்ட்ரியாகி அவரின் ஐக்கானிக் பாடலான “Who’s the Hero?” பாடல், அரங்கையே அதிர வைத்தது. அப்பாடல் முடிந்ததும் எழுந்த கைத்தட்டல் அடங்க நீண்டநேரம் ஆனது.

அதைத் தொடர்ந்து ஆண்ட்ரியாவின் ‘அமேசிங் கான்சர்ட்’ நடந்தது. யுவன் யுவதிகளுக்கும் காதலர்களுக்கும் எப்போதும் பிடித்தமான உள்ளத்தை உருக்கும் “இதுவரை இல்லாத உணர்விது…” பாடலைப் பாடி கூட்டத்தைக் கட்டிப்போட்டார்.

இசை நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா

தொடர்ந்து தமிழ்ப் பாடல்களையும் இடையிடையே இந்திப் பாடல்களையும் பாடி ரசிகர்களைக் கிறங்கடித்துக்கொண்டிருந்தார்.

“ஐ லவ் யூ ஆண்ட்ரியா” என்று இளைஞர்கள் குரல் எழுப்பிக்கொண்டேயிருக்க. ‘ஷேப் ஆஃப் யூ…’ பாடல் மூலம் அனைவரையும் ஆஃப் செய்தார்.

உலகம் முழுவதும் ஹிட்டடித்த ‘ஓ… சொல்றியா மாமா…’ பாடலுடன் ரசிகர்களை ஆடவிட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார் ஆண்ட்ரியா. உண்மையிலயே மதுரை மக்களுக்கு இந்த நிகழ்ச்சி மாறுபட்ட அனுபவம்தான்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிர்வாகி ஜெயக்குமார், தமிழ்நாட்டின் லேடி மைக்கேல் ஜாக்சன், எனவும் லேடி ஜாக்கி சான் எனவும் ஆண்ட்ரியாவைப் புகழ்ந்தவர், அவரின் ஓவியத்தையே அவருக்குப் பரிசாக வழங்கினார். அதைப் பார்த்து ரொம்பவும் மகிழ்ந்தார் ஆண்ட்ரியா.

ஆண்ட்ரியா

நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது தொகுப்பாளர், “மதுரைக்கு வந்த நீங்கள் எப்படி ஃபீல் பண்றீங்க?” என்று ஆண்ட்ரியாவிடம் கேட்க,

“சில்லுனு இருக்குற மதுரை மாதிரி, மதுரை மக்கள் அன்பில் சிறந்தவர்கள்” என்றார்.

மொத்தத்தில் ஆண்ட்ரியாவின் இசை மழை, மதுரை முழுவதையும் நனைத்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.