அமெரிக்காவில் கொலை வழக்கில் சிக்கிய தென்னிந்தியர்: கைது சிறையில் அடைத்த பொலிஸார்


அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசும் 23 வயது இளைஞர் ஒருவரை ஆணவக் கொலை குற்றச்சாட்டில் மாகாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியர் கைது

அமெரிக்காவின் அலபாமாவில் மாண்ட்கோமெரி பகுதியை சேர்ந்த அகில் சாய் மகான்காளி (25) என்ற நபரை கொலை செய்ததற்காக அதே பகுதியில் வசித்து வரும் தெலுங்கு மொழி பேசும் ரவி தேஜா(23) என்ற இளைஞர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரவி தேஜா(23) மீது ஆணவக் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு இருப்பதாக மாண்ட்கோமெரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவர் தற்போது மாண்ட்கோமெரி சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கொலை வழக்கில் சிக்கிய தென்னிந்தியர்: கைது சிறையில் அடைத்த பொலிஸார் | Telugu Man 23 Arrested For Murder Case In Us

ஞாயிற்றுக்கிழமை கிழக்கு பவுல்வர்டு(Boulevard) பகுதியில் உள்ள 3200 தொகுப்புக்கு 9:30 pm மணியளவில் வந்த பொலிஸார் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள், அகில் சாய் மகான்காளி-யை கடுமையான குண்டு காயங்களுடன் கண்டுபிடித்தனர்.

உடனடியாக அகில் சாயை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டது, இருப்பினும் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

பொலிஸார் விசாரணை

ரவி தேஜா-வின் தாக்குதலுக்கான முழுமையான பின்னணி காரணம் என்ன? என்பது குறித்து மாண்ட்கோமெரி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் கொலை வழக்கில் சிக்கிய தென்னிந்தியர்: கைது சிறையில் அடைத்த பொலிஸார் | Telugu Man 23 Arrested For Murder Case In Us

மேலும் உயிரிழந்த அகில் சாய் மகான்காளி-யின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.