Samsung S23 series மூலமாக 1400 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை அள்ளிய சாம்சங்!

இந்தியாவில் சமீபத்தில் சாம்சங் நிறுவனம் அதன் Galaxy S23 சீரிஸ் போன்களை வெளியிட்டது. இந்த போன்கள் விலை 74 ஆயிரம் ரூபாயில் தொடங்கி தலைசிறந்த Flagship போனான
S23 Ultra 1,24,999 லட்சம் ரூபாய்
விலை வரை உள்ளது.

S23, S23+, S23 Ultra என மொத்தமாக மூன்று வேரியண்ட்களில் இந்த போன் கிடைக்கிறது. இந்த போன்களின் விலை இந்திய ரூபாயில் மிகவும் அதிகம் என்றும் சாம்சங் இந்தியாவில் விலை ஏற்றத்தை செய்திருக்கக்கூடாது என்று பல டெக் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

ஆனால் சந்தை வேறு விதமாக நடந்துகொண்டுள்ளது. விலை அதிகம் என்று கூறப்பட்ட இந்த போன்களை இந்திய மக்கள் மிகவும் விரும்புவதாக தெரிகிறது. இதுவரை 2 மணிநேரத்தில் இந்தியாவில் 40 லட்சம் பேர் இந்த போன்களை வாங்க முன்பதிவு செய்துள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது இந்தியாவில் இதுவரை சாம்சங் போன்களுக்கு கிடைத்ததிலேயே மிகப்பெரிய வரவேற்பு என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 1400 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளது.

1 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த போன்களை மக்கள் வாங்க முக்கிய காரணம்
சாம்சங் நிறுவனம் இந்த போன்களுடன் வழங்கும் சலுகைகள்
ஆகும். இதற்கு சுலபமான மாதம் 5200 ரூபாய் தொடங்கும் EMI வசதி முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகள் கிடைக்கின்றன.

சாம்சங் நிறுவனத்தின் S23 Ultra 12GB + 256GB வேரியண்ட் விலை இந்தியாவில் 1,24,999 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது. அதன் 12GB + 512GB வேரியண்ட் விலை 1,34,999 லட்சம் ரூபாய் விலையிலும், 12GB + 1TB வேரியண்ட் விலை 1,54,999 லட்சம் ரூபாய் விலையிலும் விற்கப்படுகிறது.

அதன் பேஸ் மாடல் போனாக இருக்கக்கூடிய S23 74,999 ஆயிரம் ரூபாய் விலையிலும், மிட் ரேஞ்சு மாடலான S23+ 94,999 ஆயிரம் ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. S23 Ultra முன்பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளாக Galaxy Watch 4 LTE Classic மற்றும் Galaxy Buds 2 வெறும் 4999 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும்.

S23+ முன்பதிவு செய்பவர்களுக்கு Galaxy Watch4 BT 4999 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும். Galaxy S23 முன்பதிவு செய்பவர்களுக்கு 5000 ஆயிரமரூபை மதிப்புள்ள ஸ்டோரேஜ் மேம்படுத்தும் சலுகை உள்ளது. Samsung LIve நிகழ்ச்சியில் முன்பதிவு செய்தவர்களுக்கு Wirelsss Charger, Travel Adopter போன்றவை கிடைக்கும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.