இன்று என்ன தினம் தெரியுமா ? உங்க அன்புக்குரியவர்களுக்கு ரோஜா கொடுக்க மறக்காதீங்க..!!

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் “ரோஸ் டே” என்ற ரோஜா தினம் குறித்த சுவாரசியமான தகவல்களை நாம் இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம்.

அனைத்து காதலர்களுக்கும் விருப்பமான ஒரு மாதம் என்றால் அது பிப்ரவரி மாதம்தான். இந்த மாதத்தில்தான் காதலர் தினம் உள்ளது. உலகம் முழுக்க இம்மாதம் அதாவது வரும் பிப்ரவரி பதினான்காம் தேதி காதலர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கி இருப்பார்கள்.ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்கள் வித்தியாசமான பரிசுகளை கொடுத்து தங்கள் காதலன் அல்லது காதலியை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவார்கள்.

ஆனால் காதலர் தினத்திற்கு முன்பு சில தினங்கள் வருகின்றன. அதில் ஒன்றுதான் “ரோஸ் டே” எனப்படும் ரோஜா தினம் . இன்று(பிப்ரவரி 7) ரோஸ் டே உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காதலர் தின வாரத்தின் முதல் நாள் இது.

ரோஸ் டே அன்று உங்கள் நேசத்துக்கு உரிமையான காதலன் அல்லது காதலிக்கு ரோஜா மலர்களை கொடுத்து உங்கள் அன்பை நீங்கள் வெளிக்காட்டலம்.

“ரோஸ் டே” பொறுத்தவரை இளஞ்சிவப்பு நிறம் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு வண்ண ரோஜாவும் ஒவ்வொரு அர்த்தங்களை குறிக்கிறது.

ரெட் ரோஸ்:

சிவப்பு வண்ணம் என்பது காதல் ஆர்வத்தை குறிக்கும். நீங்கள் உங்கள் காதலன் அல்லது காதலியை ஆழமாக காதலித்தால் இந்த சிவப்பு ரோஜாவை கொடுங்கள்.

சிவப்பு ரோஜாக்களின் பூங்கொத்தை கொடுத்து புன்முறுவலோடு “ஐ லவ் யூ” என்று சொன்னால் நிச்சயம் அவர்களுக்கு பிடிக்கும்.

பிங்க் ரோஸ்:

இளஞ்சிவப்பு ரோஜாக்கள் ரொம்ப ஸ்பெஷல். இது சிறப்பான நபர்களை பாராட்டும் விதமாக கொடுக்கப்படுவது. இவை பாராட்டின் அடையாளம். நீங்கள் மதிக்கும் மரியாதைக்குரிய நபருக்கு நண்பரோ, வழிகாட்டியோ அவருக்கு இளஞ்சிவப்பு ரோஜாவை கொடுக்கலாம்.

ஆரஞ்சு ரோஸ்:

உற்சாகம், ஆர்வம், நன்றியுணர்வு ஆகியவற்றை தான் ஆரஞ்சு ரோஸ் குறிக்கும். உங்களுடைய என்ணங்களை யாருடன் பகிர விரும்புகிறீர்களோ, அவர்களுக்கு ஒரு கடிதத்துடன் ஆரஞ்சு ரோஜாவை வைத்து கொடுத்து நன்றி சொல்லலாம்.

ஒயிட் ரோஸ்:

உங்களுடைய மதிப்புக்குரிய நபர் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க நீங்கள் ஆசைப்பட்டால், அவருக்கு ஒரு வெள்ளை ரோஜாவை பரிசளிக்கலாம். மரியாதையை குறிக்கும் வண்ணமாக வெள்ளை உள்ளது. “உன்னை குறித்து நான் யோசிக்கிறேன்” என நீங்கள் அக்கறை காட்டும் நபருக்கு இந்த ரோஸ் கொடுக்கலாம்.

எல்லோ ரோஸ்:

மஞ்சள் ரோஜாக்கள் நட்பை குறிக்கும். உங்களுடைய சிறந்த நண்பருக்கு மஞ்சள் ரோஜா பூங்கொத்தை கொடுத்து வாழ்த்துகளை தெரிவியுங்கள். “நீங்கள் எனக்கு முக்கியமானவர்” என்பதை சொல்லும் வகையில் அவர்களுக்கு இன்று மஞ்சள் ரோஸ் கொடுக்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.