சம்பளம் வரல.. தமிழக பள்ளி ஆசிரியர்கள் எடுக்கப்போகும் அதிர்ச்சி முடிவு..!

அரசு பள்ளி ஆசிரியர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் சம்பள தொகை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களால் அனுப்பப்படுகிறது. அதுபோல, அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாவட்ட கல்வி அலுவலர்களால் அனுப்பப்படும். இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நிர்வாக சீர்திருத்தங்கள் காரணமாக கடந்தாண்டு நவம்பரில் 20 நாட்களுக்கும் மேலாக சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இப்பிரச்னைக்கு உடனே தீர்வு கண்டு தங்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, பல ஆசிரியர் சங்கங்கள், பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தன. அதற்கு, நிதி பற்றாக்குறை இருப்பதால் தாமதமாவதாக தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் கழகம் விளக்கம் அளித்தது.

அதன் வழியாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளிகள் ஆசிரியர் கூட்டமைப்பு தொடக்கக் கல்வி இயக்குனருக்கு அனுப்பிய கடிதத்தின்படி, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையை (IFHRMS) பயன்படுத்தி சம்பளம் டெபாசிட் செய்யப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதிக்கு முன்னர் சம்பளப் பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றன, ஆனால் பல மாவட்டங்களின் கருவூலத் துறையில் சம்பளப் பட்டியல் இன்னமும் தயார் செய்யப்படவில்லை ” என்று கூறி சம்பளத்தை வழங்கிடுமாறு கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், நிதித் துறையினருடன் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், ஆசிரியர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை இந்தாண்டும் நீடிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 2023 ஜனவரி மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து கருவூல அதிகாரிகளிடம் கேட்டால், ‘நிதி இல்லை’ என்று சொல்வார்களே தவிர அவர்களிடம் நிலையான பதில் இல்லை என்று ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

மேலும், நீண்ட நாட்களாக முடிவுக்கு வராமல் உள்ள இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட தமிழக அரசை கண்டித்து திடீர் வேலைநிறுத்தத்தை அறிவிக்கலாம் என்று அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மெரினாவில் கலைஞர் பேனா சின்னம் விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அதற்கு மட்டும் நிதி எங்கே வந்தது என்று கண்டித்தும் அவர்கள் அரசை கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.