609-லிருந்து நேரடியாக 2வது இடத்தைப் பிடித்தது எப்படி? அதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு? -ராகுல் கேள்வி

Rahul Gandhi Speech: மக்களவையில் ராகுல் காந்தி: இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 7) மக்களவையில் நடைபெறும் குடியரசுத் தலைவர் உரை குறித்து விவாதிக்கும் போது, ​​காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பல பிரச்சினைகளை குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் மத்திய அரசை நேரடியாக குறிவைத்து பல கேள்விகளை எழுப்பினார் மற்றும் இந்திய ஒற்றுமைப் பயணம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்திய ஒற்றுமைப் பயணத்தின் போது, மக்கள் சொல்வதைக் கேட்டோம். எங்களிடம் (காங்கிரஸ்) உள்ள குறைகளை பற்றியும் கேட்டோம். யாத்திரையின் போது குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என அனைத்து தரப்பினருடன் பேசினோம். மக்கள் தங்கள் வலியை பகிர்ந்து கொண்டனர்.

பழங்குடியினரிடம் இருந்து நிலங்கள் பறிக்கப்பட்டது
இந்திய ஒற்றுமைப் பயணத்தின் போது இளைஞர்களிடம் வேலை வாய்ப்புகள் குறித்து கேட்டபோது, ​​பலர் வேலையில்லாமல் இருப்பதாகவும் அல்லது உபேர் ஆட்டோக்களை ஓட்டுவதாகவும் கூறியதாகவும், பிரதமர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பணம் சென்றடையவில்லை என்றும் ராகுல் காந்தி கூறினார். பழங்குடியினரிடம் இருந்து அவர்களின் நிலம் பறிக்கப்பட்டது. அக்னிவீர் திட்டம் குறித்தும் மக்கள் பேசினர். அக்னிவீர் யோஜனா ஆர்எஸ்எஸ், உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்தது என்றும் இந்திய ராணுவத்திடம் இருந்து வரவில்லை என்றும் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்ட அக்னிவீரர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் மக்களுடன் செல்லுமாறு கூறுவது வன்முறைக்கு வழிவகுக்கும் என்று ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூறுகின்றனர் என ராகுல் காந்தி கூறினார்.

மக்களுடன் பேசிக்கொண்டே பயணம் தொடங்கியது
இன்று கால் நடையாக பயணமாக சென்று மக்களை சந்திக்கும் பாரம்பரியம் முடிவுக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் நடந்து செல்லும்போது, ​​மக்களின் குரலுக்கு செவிசாய்த்தோம். அதேநேரத்தில் நம் கருத்தையும் மக்களிடம் கூறவேண்டும் வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. ஆயிரக்கணக்கான மக்களிடம் பேசினோம், பெரியவர்கள், பெண்களிடம் பேசினோம். இப்படித்தான் எங்களுடன் பேச ஆரம்பித்தது எங்கள் இந்திய ஒற்றுமைப் பயணம் என்று ராகுல் காந்தி கூறினார்.

அதானி குறித்து ராகுல் காந்தி கூறியது என்ன?

மேஜிக் நடந்ததா?
அதானி விவகாரத்தையும் ராகுல் காந்தி மக்களவையில் எழுப்பினார். 2014-ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 609-வது இடத்தில் இருந்தார்.  மேஜிக் நடந்ததா என்று தெரியவில்லை, அவர் இரண்டாவது இடத்திற்கு வந்தார். இந்த வெற்றி எப்படி ஏற்பட்டது என்று மக்கள் கேட்டார்கள். இந்தியப் பிரதமருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? இந்த உறவு பல ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது தொடங்கியது என்று நான் சொல்கிறேன்.

அதானிக்காக விதிகள் மாற்றம்
அதானிக்காக விமான நிலைய விதிகள் மாற்றப்பட்டன. விதிகள் தளர்த்தப்பட்டன. இங்கே விதிகளை மாற்றியது யார் என்பது முக்கியமான விஷயம் என்றார். ஒருவர் விமான நிலையம் சம்பந்தமான தொழிலில் அனுபவம் இல்லை என்றால் அவர் இந்த விமான நிலையங்களை மேலாண்மை செய்வதற்கு ஒப்பந்தங்கள் எடுக்க முடியாது என்பது தான் விதி. ஆனால் அதானிக்காக இந்திய அரசு இந்த விதியை மாற்றியது.

இது யாருடைய பணம்? 
கொஞ்ச நாள் முன்னாடி ஹிண்டன்பர்க் ரிப்போர்ட் வந்தது அதானிக்கு இந்தியாவுக்கு வெளியில ஷெல் கம்பெனி இருக்குன்னு எழுதியிருந்தா அது யாருடைய ஷெல் கம்பெனி? ஷெல் நிறுவனங்கள் இந்தியாவுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அனுப்புகின்றன. இது யாருடைய பணம்? அதானி இந்த வேலையை இலவசமாக செய்கிறாரா?

மோடியும் அதானியும் ஒண்ணு
20 ஆண்டுகளில் பாஜகவுக்கு அதானி கொடுத்த பணம் எவ்வளவு? முன்பு அதானியின் கப்பலில் சென்ற மோடி, இப்போது மோடியின் கப்பலில் செல்கிறார். மோடியும் அதானியும் இணைந்து செயல்படுகின்றனர்.

மாயாஜாலம் செய்யும் பிரதமர்
பிரதமர் ஆஸ்திரேலியா சென்று மாயாஜாலம் மூலம் அதானிக்கு ஒரு பில்லியன் டாலர் கடனை வழங்குகிறது. பின்னர் வங்கதேசம் சென்ற பிரதமர், 1,500 மெகாவாட் மின்சாரத்திற்கான ஒப்பந்தம் அதானி நிறுவனத்திடம் செல்கிறது. எல்ஐசியின் பணம் அதானி நிறுவனத்தில் ஏன் போடப்பட்டது?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.