ஈரோடு கிழக்கு, அதானி ஊழல், பேனா சின்னம்…. – கே. பாலகிருஷ்ணன் விளக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர், சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் இடம் கொடுக்காமல் கலைஞருக்கு நினைவு சின்ன அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

விக்டோரியா கவுரி

பல பேர் அரசியல் கட்சியில் இருந்து நீதிபதி ஆகிறார்கள். பாஜகவின் மாதர் சங்கத்தின் தலைவராக இருந்துவிட்டு சிறுபான்மை மக்கள் குறித்து கடுமையாக தறைகுறைவான கருத்துக்களை பேசிய நபர் நீதிபதியானால் எவ்வாறு சிறுபான்மையினர் வழக்குகளை விசாரிப்பார் என்று தெரியவில்லை,

இப்படிப்பட்ட நபரை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது மோசமான செயல் எனவும், நீதிமன்றங்கள் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறை துவங்கிவிடும், இவ்வளவு அவசரமாக நியமிக்க அவசியமில்லை என தெரிவித்தார்.

அதானி ஊழல்

எதிர்க்கட்சிகள் அனைத்தும் அதானி ஊழல் முறைகேடுகள் மற்றும் அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து பாராளுமன்ற குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. பகிரங்கமாக, ஆய்வு நிறுவனம் இவ்வளவு முறைகேடு நடந்துள்ளதாக கேள்வி எழுப்பியது; அதற்கு முறையான பதில் அளிக்கவில்லை. அந்த ஆய்வறிக்கை வந்தவுடன் அதானி பங்கு மார்க்கெட் சரி பாதியாக குறைந்துவிட்டது. எல்ஐசி, பங்குகளும் குறைந்து விட்டன. இதனால் இந்திய பொருளாதாரத்தில் எந்த தாக்கமும் ஏற்படவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியாவின் பொது த்துறை நிறுவனங்கள் இதுபோன்று தனியார் நிறுவனங்களிடம் பல ஆயிரம் கோடி முதலீடு போட்டுள்ளது.இதனால் அரசு நிறுவனங்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும், இதனால் ஏழை மக்களின் லாப விகிதம் தான் குறையும் என்றார்.

பட்ஜெட்

வேலைவாய்ப்பு குறித்து இந்த பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதை கண்டித்து பிப்ரவரி 27, 28ஆம் தேதியில் கண்டன இயக்கத்தை தமிழகம் முழுவதும் ஒன்றிய நகர மாவட்ட தலைநகரில் நடத்த கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் பல இடங்களில் பட்டியல் இன மக்கள் மீது பல்வேறு தாக்குதல் மற்றும் தீண்டாமை கொடுமை நடைபெற்று வருகிறது. சேலம் திருமலைகிரி பகுதியில் ஆலயம் நுழையும் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொது ஆலயங்களுக்கு செல்லக்கூடாது என்று தலித் மக்களுக்கு

அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை வேங்கைவயல் பகுதியில் மனித கழிவுகளை குடிநீர் கலந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. இதுவரை குற்றவாளி யார் என்று தெரியவில்லை. சின்ன கிராமத்தில் நடந்த பிரச்சினைக்கு ஏன் இந்த தாமதம் என்று தமிழக அரசு காவல்துறையின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு என்று தெளிவாக தெரிந்த ஒன்று.. மதசார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் ஆளுமையாக திகழ்ந்தவர். அவருக்கு நினைவுச்சின்னம் வைப்பது எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.

திமுக அரசு பேனா நினைவுச்சின்னம் வைப்பது குறித்து அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும்,எங்களைப் பொறுத்தவரை சின்னம் வைக்கும் போது சர்ச்சைக்குள்ளாகாமல், விவாத பொருளாகாமல் வைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.