துருக்கி இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த அதிசய குழந்தை!


துருக்கியில் இரண்டு நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட 5 நிலநடுக்கங்களுக்கு மத்தியில், இடிபாடுகளுக்கு அடியில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இடிபாடுகளில் பெற்றோர் உயிரிழந்த நிலையில், புதிதாக பிறந்த குழந்தை மட்டும் உயிர் பிழைத்ததால், இந்தக் குழந்தையை அதிசய குழந்தை என அழைக்கப்படுகிறது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கனக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. இறப்பு எண்ணிக்கை 5000-த்தை கடந்ததாக கூறும் நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறு வருகிறது, இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த அதிசய குழந்தை! | Miracle Baby Born Under Debris Turkey EarthquakeTwitter @troy_dalio

இதற்கு மத்தியில் ஒரு நல்ல செய்தியாக, இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தியின் பெற்றோர் உயிருடன் மீட்க முடியாததால் அனாதையாக விடப்பட்டுள்ளது.

புதிதாகப் பிறந்த பெண் குழந்தை மற்றும் அதன் குடும்பத்தைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆனால், அவர்கள் சிரியாவின் கொடூரமான போரால் டெய்ர் எஸோரிலிருந்து அஃப்ரினுக்கு இடம்பெயர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தின் போது குழந்தையின் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டதாக அறியப்படுகிறது.

வடகிழக்கு சிரியாவின் அஃப்ரின் கிராமப்புறத்தில் உள்ள ஜெண்டரஸில், இருள், மழை மற்றும் குளிர் சூழ்ந்துள்ளதால், பிறந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினரைக் காப்பாற்ற ஒரு மாபெரும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஆனால் பெற்றோர்கள், பூகம்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவில்லை.

துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து இன்றும் (செவ்வாய்கிழமை) இரண்டு நிலநடுக்கங்கள் துருக்கியைத் தாக்கின.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.