பணப்பரிமாற்ற மோசடி வழக்கு பத்திரிகையாளர் மனு தள்ளுபடி| Dismissal of journalists plea in remittance fraud case

புதுடில்லி, பணப்பரிமாற்ற மோசடி வழக்கில், தனக்கு எதிராக காஜியாபாத் நீதிமன்றம், ‘சம்மன்’ அனுப்பியதை எதிர்த்து, பத்திரிகையாளர் ராணா அயூப் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுடில்லியைச் சேர்ந்தவர் பெண் பத்திரிகையாளர் ராணா அயூப்.

குற்றப்பத்திரிகை

இவர், கொரோனா காலத்தின் போது மஹாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உதவப் போவதாக கூறி, இணையதளம் வாயிலாக நிதி திரட்டினார்.

இவ்வாறு திரட்டப்பட்ட நிதியை, மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தாமல், தன் சொந்த நலனுக்கு அவர் பயன்படுத்தியது தெரியவந்தது.

மேலும், அந்த தொகையை தன் குடும்பத்தினருக்கு சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, ராணா அயூப் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து, உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

விசாரணை

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி ராணா அயூபுக்கு விசாரணை நீதிமன்றம், ‘சம்மன்’ அனுப்பிஇருந்தது.

இதை எதிர்த்து ராணா அயூப், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், ‘மனுதாரர், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம்’ என கூறி, ராணா அயூப்பின் மனுவை தள்ளுபடி செய்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.