1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது ஜூம் செயலி நிறுவனம்| App company Zoom lays off 1300 employees

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரிக்கா வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் நிறுவனம் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பொது முடக்கம் காரணமாக பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதித்தன. இதற்கு பெரிதும் பயன்பட்டது வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் .

latest tamil news

இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்து உள்ளதாக இதன் சி.இ.ஓ., இரிக் யுவான் தெரிவித்தார். அதற்கு முன்னதாக இவர்களுக்கு அடுத்தடுத்து இ.மெயில் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.