உக்ரைன் – ரஷ்யா போர் நெருக்கடி காரணமாக
நடுநிலை நாடாக பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தை உடைக்க சுவிஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கே சாதகமாக
ரஷ்யா- உக்ரைன் போர் தொடர்பில் சுவிஸ் அரசாங்கம் நடுநிலையை பராமரித்தால் அது ரஷ்யாவுக்கே சாதகமாக அமையும் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
@EPA
மேலும், பொதுமக்களின் உக்ரைன் ஆதரவு மன நிலை, உலக அரசியலின் போக்கு என உருவான அழுத்தமே, சுவிஸ் ஆயுதங்களை போர் நெருக்கடி மிகுந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை முடிவுக்கு கொண்டுவர சுவிஸ் அரசாங்கத்தை தூண்டியுள்ளது.
சுவிஸ் ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள், அதை மீள் ஏற்றுமதிக்கு சுவிட்சர்லாந்தின் நூற்றாண்டு கால முடிவு தடை போட்டு வருகிறது.
இதனால், சுவிட்சர்லாந்தில் செயல்படும் மிகப்பெரிய ஆயுத தொழில் பாதிக்கப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் கடும்போக்கு முடிவால், பல மேற்கத்திய நாடுகள் சுவிஸ் ஆயுதங்களை உக்ரைனுக்கு ஆதரவாக ஏற்றுமதி செய்ய முடியாமல் போயுள்ளது.
இது ரஷ்யாவுக்கு சாதமாக அமைந்துள்ளது என்றே கூறப்படுகிறது.
@EPA
சுவிஸ் ஆயுதங்கள் ஏற்றுமதிக்கு
இந்த நிலையில் சுவிஸ் அரசியல்வாதி Thierry Burkart சுவிட்சர்லாந்திற்கு ஒத்த ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட நாடுகளுக்கு ஆயுதங்களை மீள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் பிரேரணையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.
நாம் நடு நிலையை பேண வேண்டும், ஆனால் நாம் மேற்கத்திய நாடுகளின் ஒருபகுதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
உக்ரைனுக்கு உதவும் நாடுகளை தடுத்து நிறுத்துவது முறையல்ல என குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு நாம் செய்வது ரஷ்யாவுக்கு உதவுவது போலானது, அது நாம் இதுவரை பேணும் நடு நிலை அல்ல என Thierry Burkart விளக்கமளித்துள்ளார்.
@getty
1815ல் நடு நிலையை பராமரிப்பதாக முடிவெடுத்துள்ள சுவிட்சர்லாந்து 1907ல் உடன்படிக்கை ஒன்றின் மூலமாக அதை உறுதி செய்துள்ளது.
அதாவது போர் சூழல் மிகுந்த ஒரு நாட்டிற்கு சுவிட்சர்லாந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆயுதங்களை அனுப்பாது.
சுவிட்சர்லாந்தின் நூற்றாண்டு கால முடிவு தற்போது ஆட்டம் கண்டுள்ள நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது, அதில் உக்ரைனுக்கு ஆயுதங்களை மீள் ஏற்றுமதி செய்ய 55% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.