லண்டனில் மாயமாகியுள்ள ஆசிய இளம்பெண்: பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை


தெற்கு லண்டனில் வாழ்ந்துவரும் சிறுமி ஒருவரை நான்கு நாட்களாகக் காணவில்லை.

வழக்கத்துக்கு மாறான விடயம்

தெற்கு லண்டனிலுள்ள Croydonஇல் வாழ்ந்துவரும் ஷ்ரேயா (15) என்ற இளம்பெண், 3ஆம் திகதி (பிப்ரவரி 3), West Thornton என்ற இடத்தில் அமைந்துள்ள பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது மாயமாகியுள்ளார். 

ஷ்ரேயா இப்படி பெற்றோரிடம் சொல்லாமல் எங்கும் செல்வதில்லை என்பதால், அவரை நான்கு நாட்களாக காணாத குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

லண்டனில் மாயமாகியுள்ள ஆசிய இளம்பெண்: பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை | Missing Asian Girl In London

பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை

ஷ்ரேயாவின் பெற்றோர், அவர் இப்படி சொல்லாமல் வீட்டை விட்டுச் செல்லும் பழக்கம் கொண்டவரில்லை என கூறியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், ஷ்ரேயாவை யாராவது பார்த்தால், உடனடியாக தங்களுக்கு தகவலளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.