AK62 Update: அஜித்தின் ஏ.கே. 62 படத்தின் இயக்குநர் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
ஏ.கே. 62லைகா தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கும் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டனர். படப்பிடிப்பு துவங்க வேண்டிய நேரத்தில் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டார்கள். அவர் தயார் செய்து வந்த ஸ்க்ரிப்ட் திருப்தி அளிக்கவில்லையாம். இதையடுத்து விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி இயக்குவார் என்று செய்தி வெளியானது.
AK62, Vignesh Shivan: அஜித், லைகா செய்தது அநியாயம், விக்கிக்கு நியாயம் வேண்டும்: ரசிகர்கள்
மித்ரன்AK 62: டைரக்ஷன் மட்டுமே மகிழ் திருமேனி, கதை யாருதுனு தெரிந்தால் மெர்சலாகிடுவீங்கஏ.கே. 62 படத்தை இயக்குவது மட்டும் தான் மகிழ் திருமேனி, ஆனால் கதை பி.எஸ். மித்ரனுடையது என்று கூறப்பட்டது. அடேங்கப்பா, மித்ரன் கதை என்றால் செமயாக இருக்கும், அஜித் குமாருக்கு ஒரு ஹிட் பார்சல் என்றார்கள் ரசிகர்கள். ஆனால் மகிழ் திருமேனியை உறுதி செய்யவில்லையாம். ஏ.கே. 62 படத்தை இயக்கப் போவது யாருமே எதிர்பார்க்காதவர் என்கிறார்கள்.
ரீமேக்பிரபலமில்லாத ஒரு இயக்குநரை தான் ஏ.கே. 62 படத்திற்கு தேர்வு செய்திருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஏ.கே. 62 படத்தின் கதை ஒரிஜினல் இல்லை அது சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது. இப்படி மாறி மாறி வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
ரசிகர்கள்நாங்களே ஏற்கனவே குழப்பத்தில் இருக்கிறோம். இதில் நீங்கள் அடுத்தடுத்து எதையாவது சொல்லி டென்ஷனாக்காதீர்கள் என்கிறார்கள் அஜித் ரசிகர்கள். இதற்கிடையே படத்தின் இயக்குநர் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அறிவிப்பு வந்தால் தான் இயக்குநர் யார் என்பது தெரியும். அதுவரை கணிப்புகள் தொடரும் போன்று.
வெங்கட் பிரபுஇதற்கிடையே அஜித்தை வைத்து மங்காத்தா 2 படத்தை இயக்க பல காலமாக காத்துக் கொண்டிருக்கும் வெங்கட் பிரபுவுக்கு தான் ஏ.கே. 62 பட வாய்ப்பு கிடைக்கும் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. அது குறித்து அறிந்த விஜய் ரசிகர்களோ, வெங்கட் பிரபுணா அஜித் படம் வேண்டாம், வாய்ப்பு வந்தாலும் அதை விட்டுவிட்டு வந்து தளபதி 69 படத்தை இயக்குங்கள். மாஸாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
நயன்தாராஏ.கே. 62 பட வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைக்க அவரின் காதல் மனைவியான நயன்தாரா தான் காரணம் என கூறப்பட்டது. அஜித் குமாரிடம் பேசி வாய்ப்பை வாங்கிக் கொடுத்தாராம். இந்நிலையில் விக்னேஷ் சிவனை நீக்கியதும் அஜித் மீது கோபத்தில் இருக்கிறார் நயன்தாரா என தகவல் வெளியாகியிருக்கிறது.