திமுகவின் ‘பி’ டீம் ஓபிஎஸ் சந்திக்கவோ, சமாதானத்துக்கோ வாய்ப்பில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னை: ஓபிஎஸ் திமுகவின் ‘பி’ டீமாக செயல்படுவதால் அவரை பழனிசாமி சந்திப்பதற்கோ, சமாதான பேச்சுவார்த்தைக்கோ வாய்ப்பில்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல்அதிகாரியிடம் அதிமுக சார்பில்முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது: அமைச்சர்கள் அத்துமீறல்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, குறுக்கு வழியில் வெற்றி பெறும் முயற்சியில் ஆளுங்கட்சி ஈடுபட்டுள்ளது. ஒன்று அல்லது மூன்று பூத் என்று அமைச்சர்கள் பிரித்துக் கொண்டு பணி செய்யும்போது, ஆரத்தி எடுக்கும் நிகழ்வை சாக்காக வைத்து தட்டு, தேங்காய் மற்றும் பணம் வழங்குகின்றனர். அமைச்சர்கள் அனைவரும் இதுபோன்ற அத்துமீறல்களை செய்கின்றனர்.

சாலைகளில் அவர்கள் கட்சி சின்னத்தை வரைகிறார்கள். இதுபோன்ற செயல்களை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம். இதற்கான அனைத்து ஆதாரங்களும் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியும் நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்துள்ளார்.

தொண்டர்கள் மகிழ்ச்சி: ஓ.பன்னீர்செல்வம் – பழனிசாமிஇடையிலான சந்திப்பு 100 சதவீதம் நிகழாது. பழனிசாமியின் இடையீட்டு மனு காரணமாகவே இரட்டை இலையை பெற்றுள்ளோம். ஓபிஎஸ், திமுகவின் பி-டீமாக இருந்துகொண்டு, இரட்டை இலையை எப்படியாவது முடக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். அது முடியாமல் போய்விட்டது.

இரட்டை இலை கிடைத்ததால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அதிமுக மகத்தான வெற்றியைபெறும். ஓபிஎஸ் தரப்பினர் திமுகவுடன் சார்ந்திருக்கும் நிலையில், அவர்களை சந்திக்கவோ, சமா தான பேச்சுவார்த்தைக்கோ வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஓபிஎஸ், திமுகவின் பி-டீமாக இருந்து கொண்டு, இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். அது முடியாமல் போய்விட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.