துருக்கி நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன் பறவைகளிடம் விநோதமான நடவடிக்கை

துருக்கி-சிரியா எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.நில அதிர்வால் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப்பகுதிகளில்ல் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. 1500க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த கோர நிகழ்வால் இதுவரை துருக்கியில் 5 ஆயிரத்து 434 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 1 ஆயிரத்து 832 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 266 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில்,துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன் பறவைகளிடம் விநோதமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளது.பறவைகள் கூச்சலிட்டுக்கொண்டு அங்குமிங்குமாக பறக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.இதனை இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.”இயற்கையின் எச்சரிக்கை அமைப்பு. அதைக் கேட்கும் அளவுக்கு நாம் இயற்கையோடு இணங்கவில்லை.” என்று பதிவிட்டிருக்கிறார்.

ஏதாவது ஒரு இயற்கை பேரிடர் நிகழப்போகிறது என்றால், மனிதர்கள், தொழில்நுட்பங்களுக்கு முன்னதாக அதனை அறிவது விலங்குகளும் பறவைகளும் தான்.

2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமிக்கு முன் விலங்குகள் சில தப்பிக்க முயற்சித்ததும், சுமத்திரா நிலநடுக்கத்திற்கு முன் யானைகள் நடவடிக்கை ஏற்பட்ட மாற்றங்கள் இதற்கு சான்று.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.