சேலம் மாவட்டத்தில் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பத்தாம் வகுப்பு மாணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மல்ல மூப்பம்பட்டி பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதையடுத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் அலறல் சத்தம், திடீரென வீட்டின் குளியல் அறையிலிருந்து வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியாடைந்த பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது, அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 10ஆம் வகுப்பு மாணவன் குளியல் அறையில் இருந்து தப்பி ஓடியுள்ளான்.
இந்நிலையில் பெற்றோர் சிறுமியிடம் இதுகுறித்து கேட்டபோது, மாணவன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.