லியோ படத்திலிருந்து விலகிய த்ரிஷா? த்ரிஷாவின் தயார் கூறுவது என்ன?

ரசிகர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த விஜய்யின் 67வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்து அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.  இந்த படத்திற்கு ‘லியோ’ என்று அதிகாரபூர்வ பெயரிடப்பட்டு, ப்ளடி ஸ்வீட் என்கிற வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பார்வைகளை பெற்று, ரசிகர்களால் வைப் செய்யப்பட்டு வருகிறது.  லோகேஷ் கனகராஜ்  படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், அவரோடு மீண்டும் விஜய் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு அளவுக்கடந்த மகிழ்ச்சியினை அள்ளித்தந்துள்ளது.  பிப்ரவரி மாதத்தில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது படக்குழுவினர் முதற்கட்ட படப்பிடிப்புக்காக காஷ்மீர் பகுதிக்கு பறந்து சென்றுள்ளனர்.

‘லியோ’ படக்குழுவினர் காஷ்மீருக்கு புறப்பட்ட சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.  இந்நிலையில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்புக்காக விஜய்யுடன் காஷ்மீர் சென்ற நடிகை திரிஷா மூன்று நாட்களுக்கு பிறகு விமானம் மூலம் தனியாக திரும்பியதாக சமூக வலைத்தளங்களில் சில வதந்திகள் பரவ தொடங்கியது.  அதற்கேற்றாற்போல சென்னை விமான நிலையத்தில் திரிஷா இருக்கும் புகைப்படங்களும் வைரலானது.  படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு சென்ற திரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செட்டில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியானது.  மேலும் காஷ்மீர் பகுதியில் குளிர் அதிகமாக இருப்பதால் நடிகை குளிர் தாங்கமுடியாமல் திரும்பிவிட்டதாகவும் வதந்திகள் வெளியானது.

இன்னும் சில இணையவாசிகள் ‘லியோ‘ படத்தில் ப்ரியா ஆனந்த் தான் உண்மையான கதாநாயகி என்றும் த்ரிஷாவின் கதாபாத்திரம் பிளாஷ்பேக்கில் ஒரு சில காட்சிகளில் தான் வரும் என்றும் அதில் அவர் கொல்லப்பட்டு விடுவார் என்றும் வாய்க்கு வந்த செய்திகளை அடித்துவிட்டனர்.  இப்படி ஒருவரும் ஒவ்வொரு வதந்திகளை பரப்பி வரும் நிலையில் த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன், தனது மகள் காஷ்மீரில் தான் இருக்கிறார் என்றும், மற்ற நடிகர்களுடன் சேர்ந்து ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்றும் பேட்டியளித்து திரிஷா குறித்து எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தை லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.  இப்படத்தின் விஜய், திரிஷா, சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.