கடும் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கும் நிலையில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 86,584 பவுண்டுகள்
இதனால் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஊதியத்தில் 2,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக பெற உள்ளனர்.
இந்த ஊதிய உயர்வானது, நடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை ஊதியத்தில் 2.9% அதிகரிக்கப்பட்டு, இனி ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 84,144 பவுண்டுகள் முதல் 86,584 பவுண்டுகள் வரையில் ஊதியமாக பெற உள்ளனர்.
@news.sky.com
ஆனால் இந்த ஊதிய உயர்வானது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சமீப வாரங்களாக ஊதிய உயர்வு கோரி NHS ஊழியர்கள், ரயில், கல்வி மற்றும் பொதுத்துறை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தான் Ipsa நிர்வாகம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு குறித்து உறுதி செய்துள்ளதுடன், ஏப்ரல் 1ம் திகதி முதல் இது அமுலுக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம்
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த ஊதிய உயர்வானது கடந்த ஆண்டு பொதுத்துறை ஊழியர்களின் சராசரி ஊதிய உயர்வுக்கு சமமாக இருக்கும் எனவும் விளக்கமளித்துள்ளது.
@reuters
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசியாக ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், இரண்டு ஆண்டுகள் ஊதிய உயர்வு உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.