பிரபல பார்டர் பரோட்டா கடை குடோனுக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகேயுள்ள பிரபல பார்டர் பரோட்டா கடை குடோனுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ரஹ்மத் பரோட்டா ஸ்டால் என்ற கடையின் குடோனில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பாக கலப்பட பொருட்கள் மற்றும் கெட்டுப்போன உணவு பொருட்கள் இருப்பு வைத்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில், உரிமையாளரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

உரிமையாளர் வர மறுத்ததால், குடோனுக்கு சீல் வைக்கப்பட்டதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.