விளாடிமிர் புடினின் ரஷ்யா இன்னொரு ஐரோப்பிய நாட்டை மொத்தமாக சிதைக்கும் ரகசிய திட்டத்துடன் களமிறங்க இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அம்பலப்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் அடுத்த இலக்கு மால்டோவா
உக்ரைன் உளவுத்துறை ரஷ்யாவின் இந்த ரகசிய திட்டத்தை தெரிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் பேசிய உக்ரைன் ஜனாதிபதி, ரஷ்யாவின் அந்த ரகசிய திட்டம் தொடர்பில் அம்பலப்படுத்தினார்.
@PA
மேலும், ரஷ்யாவின் அடுத்த இலக்கு மால்டோவா என்பதை உறுதி செய்துள்ள நிலையில், அங்குள்ள ஜனாதிபதியை தொடர்புகொண்டு இந்த விவகாரம் தொடர்பில் விவாதித்ததாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மால்டோவா நாட்டின் ஜனநாயகத்தை சிதைக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதை விளக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மால்டோவா நாட்டின் ஜனநாயகத்தை சிதைத்து, அந்த நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டு வருவதாகவே ரகசிய ஆவணங்களில் இருந்து தெரிந்துகொண்டதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பு போன்றதொரு நிலை மால்டோவா நாடுக்கும் ஏற்படலாம் எனவும், ஆனால் தற்போதைய சூழலில் ரஷ்யா அந்த திட்டத்தை முன்னெடுக்குமா என்பது உறுதியாக கூற முடியாது என்றார் ஜெலென்ஸ்கி.
ஆர்வமுள்ள மேற்கத்திய சக்திகள்
மால்டோவா நாட்டை இன்னொரு உகிரைனாக மாற்றுவது குறித்து முடிவெடுத்து வருவதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ள நிலையிலேயே இந்த தகவலும் வெளியாகியுள்ளது.
@getty
மேலும், மால்டோவாவும் ருமேனியாவும் ஒன்றாக இணைவதற்கு ஆர்வமுள்ள மேற்கத்திய சக்திகள், மால்டோவா ஜனாதிபதி சாண்டுவுக்கு ஆதரவாக இருப்பதாக அமைச்சர் லாவ்ரோவ் குற்றம் சாட்டினார்.
2023 ஆம் ஆண்டில் தெற்கு உக்ரைன் வழியாக ஒரு தரைவழி பாதையை உருவாக்கும் முயற்சியில் ரஷ்யா ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கலாம் என்று மால்டோவா தேசிய புலனாய்வு நிறுவனம் கடந்த டிசம்பர் மாத இறுதியில் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.