துருக்கி மற்றும் சிரியாவை மொத்தமாக உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று பலி எண்ணிக்கை 20,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பலி எண்ணிக்கை 20,000
நிலநடுக்கம் ஏற்பட்ட இந்த மூன்று நாட்களில் நூறுக்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் துருக்கியில் 17,134 பேர்களும் சிரியாவில் 3,317 பேர்களும் பலியாகியுள்ளதாக உறுதி செய்துள்ளனர்.
@reuters
ஏற்கனவே, பலி எண்ணிக்கை 20,000 தாண்டும் என ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரித்திருந்தது. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டு 72 ,மணி நேரம் கடந்துள்ள நிலையில், உயிருடன் இனி மீட்கப்படுபவர்கள் எண்ணிக்கை சரிவடையும் என்றே அஞ்சப்படுகிறது.
மட்டுமின்றி, கடுமையான குளிர் மற்றும் காற்று மீட்பு நடவடிக்கைகளை மொத்தமாக சீர்குலைத்து வருகிறது.
இதுவரை 20,451 பேர்கள் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2011ல் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பலியானவர்கள் எண்ணிக்கையை, தற்போது துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட இழப்புகள் கடந்துள்ளதாக கூறுகின்றனர்.
@reuters
குறைந்தது 70,347 பேர் காயம்
ஜப்பானின் ஃபுகுஷிமா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அப்போது 18,000 பேர்கள் பலியாகியிருந்தனர்.
இதனிடையே, துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், நிலநடுக்கத்தால் குறைந்தது 70,347 பேர் காயமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலையில் ரிக்டர் அளவில் 7.8 என பதிவான நிலநடுக்கம் தெற்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவை மொத்தமாக சிதைத்துள்ளது.
அத்துடன், நூறு எண்ணிக்கை கடந்த நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளது.
@reuters
சில நொடிகளுக்குள், மருத்துவமனைகள், பள்ளிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் உயிர்கள் என அனைத்தும் பேரழிவில் சிக்கியது.
சம்பவம் நடந்து 72 மணி நேரம் கடந்துள்ள நிலையில், உயிர் தப்பிய ஆயிரக்கணக்கான மக்கள் தங்க குடியிருப்புகள் இன்றி, கடும் குளிரில் பசியுடன் அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பேரழிவை தாங்கள் நேருக்கு நேர் எதிர்கொண்டதாகவும், எங்கள் மக்கள் பொறுமைசாலிகள் எனவும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
@reuters