பிப்.13 வரை அனைத்து எம்பிக்களும் அவைக்கு வர பா.ஜ உத்தரவு

புதுடெல்லி: வருகிற பிப்.13ம் தேதி வரை அனைத்து எம்பிக்களும் மக்களவையில் ஆஜராக வேண்டும் என்று பா.ஜ கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது. மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மக்களவையிலும், நேற்று மாநிலங்களவையிலும் எதிர்கட்சிகளுக்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசினார்.  பிப்.13ம் தேதி வரை அவை நடைபெற உள்ளது. இந்தநிலையில் பிப்.13ம் தேதி வரை அனைத்து பா.ஜ எம்பிக்களும் மக்களவைக்கு தவறாமல் வர வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிரதமர் பேசி முடித்து வெளியேறிய பிறகு, அனைத்து பா.ஜ எம்பிக்களும் வெளியேறி விட்டனர். அவையில் போதிய உறுப்பினர்கள் இல்லாததை திமுக எம்.பி. தயாநிதி மாறன் சுட்டிக்காட்டி, வேறுவழியின்றி மக்களவையை சபாநாயகர் ஒத்திவைத்ததைதொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.