கனிம வளங்கள் கடத்தல் விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

கோவையை சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் “கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னனூர், காரமடை, தொண்டாமுத்தூர் பகுதிகளில் இயங்கி வரும் 300க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் அனுமதியின்றி சட்டவிரவாதமாக செயல்பட்டு வருகிறது.

இந்த கல்குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கற்கள், ஜல்லி, எம்சாண்டு போன்ற கனிம பொருட்கள் கேரளாவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர்.

கேரளாவுக்கு லாரிகள் மூலம் 2 யூனிட் கனிம வளம் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும் நிலையில் 12 யூனிட் வரை கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த சம்பவம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எனவே கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் குவாரிகளுக்கு எதிராகவும் கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துபவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.ராஜா மற்றும் சரவண சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த மனு மீது தமிழக அரசு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.