கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொத்து மதிப்பை விட நான்கு மடங்கு சொத்துக்களை குவித்துள்ளார் NBA ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் என தெரியவந்துள்ளது.
74 மில்லியன் பவுண்டுகள்
ஆறு முறை NBA சாம்பியன் பட்டம் வென்றுள்ள மைக்கேல் ஜோர்டன் தொழில்முறையாக பெற்ற மொத்த ஊதியமானது 74 மில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது.
@getty
ஆனால் அவர் ஓய்வை அறிவித்த பின்னர், அவரது சொத்துமதிப்பானது ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது.
Nike, Hanes மற்றும் Gatorade நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்களின் ஊடாக அவரது சொத்துமதிப்பு 1.5 பில்லியன் பவுண்டுகள் என உயர்ந்துள்ளது.
ஆனால் ரொனால்டோவின் சொத்துமதிப்பானது வெறும் 363 மில்லியன் பவுண்டுகள் மட்டுமே.
NBA ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் விளையாட்டின் மீதான தமது ஈடுபாடை அவர் குறைத்துக்கொள்ளவில்லை.
Charlotte Hornets என்ற அணியின் உரிமையாளரான மைக்கேல் ஜோர்டான், 2019ல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்குகளை விற்பனை செய்தார்.
கூடைப்பந்து அணி ஒன்றின் உரிமையாளராக மட்டுமின்றி, 2020 முதல் NASCAR அணி ஒன்றின் உரிமையாளர்களில் ஒருவராகவும் உள்ளார்.
@PA
மூன்றாவது இடத்தில் ரொனால்டோ
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் ரொனால்டோ மூன்றாவது இடத்தில் இருந்தார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் விளையாட்டு வீரர்களில் 1 பில்லியன் டொலர் சொத்துமதிப்பை எட்டும் முதல் வீரராக திகழ்ந்தார் ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.