ரவி ராஜ்
ரவி ராஜ்தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்கள் பலர் தங்களின் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்பார்கள். என்னதான் அவர்களுக்கு உரிய சம்பளங்கள் கிடைக்கவில்லை என்றாலும் சிலருக்கு ரசிகர்களின் அங்கீகாரம் கிடைத்து வந்தது. ஆனால் ஆனால் பல குணசித்திர நடிகர்களுக்கு சரியான அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை என்பது வேதனையான விஷயமாக பார்க்கப்படுகின்றது. அப்படி பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் கனகச்சிதமாக பொருந்தி தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தான் ரவிராஜ்
பல ஆண்டுகளாக ரவி ராஜ் 1985 ஆம் ஆண்டு மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான இதயக்கோயில் திரைப்படத்தில் கல்லூரி விரிவுரையாளராக தோன்றினார். அதன் பின் பல படங்களில் தன் நடிப்பு திறனால் ரசிகர்களை ஈர்த்துள்ளார். அதே மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான நாயகன் படத்தில் மருத்துவராக நடித்திருப்பார். அந்த காட்சி இன்றளவும் ஹைலைட்டாக அமைந்தாலும் இவரின் பெயர் அப்படத்தில் இடம்பெறவில்லை. என்னதான் ஒரு காட்சியாக இருந்தாலும் படத்தில் முக்கியமான காட்சியில் நடித்தும் நடிகரின் பெயர் இடம்பெறாதது ஆச்சரியமாகவே உள்ளது.
பல படங்கள் நாயகன் படத்தை தொடர்ந்து ரவிராஜ் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் படத்திலும் கவனிக்கப்படும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து பாய்ஸ் , பட்டியல், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடரான கானா காணும் காலங்கள் என பல படங்களிலும் சீரியலிலும் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ரவி ராஜ். ஸ்ட்ரிக்டான ஆசிரியர் கதாபாத்திரம் என்றால் பல இயக்குனர்களுக்கு இவரின் முகம் தான் தோன்றும். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் பொருந்தி பல படங்களில் நடித்திருப்பார் ரவி ராஜ்
தனித்துவம் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்த ரவி ராஜ் தரமணி திரைப்பட கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி முதல்வராக ஓய்வு பெற்றார். மேலும் DD மெட்ரோ சேனல் காலத்தில் எழுத்தாளர் சா.கந்தசாமியின் தொலைந்து போனவர்கள் என்ற கதையை தொலைக்காட்சி தொடராக இயக்கியவர் இவர் தான். இவ்வாறு பல சிறப்பம்சங்களை கொண்ட இவரின் பெயர் கூட ரசிகர்கள் பலருக்கு தெரியாது. மேலும் பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியும் இவரை திரைத்துறையினர் கண்டுகொள்ளாது இருப்பதும் ஆச்சர்யமாக இருக்கின்றது. குறிப்பாக இவரை பற்றி இணையத்தில் எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது