திருவனந்தபுரம் : கேரளாவில், மத்திய இணையமைச்சர் முரளிதரனின் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை, மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருப்பவர் முரளிதரன். இவரது வீடு, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ளது. இங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், வீட்டின் ஜன்னல் கண்ணாடியை அடித்து நொறுக்கியதுடன், அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியையும் உடைத்திருப்பதை பார்த்து பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது, ரத்தத்துளிகள் சிந்தி இருந்ததையும் கண்டறிந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement