எடப்பாடி அனுப்பிய தூது: அதிமுக வாக்கு வங்கியில் பெரிய ஓட்டை – எப்படியாவது சரி செய்யணும்!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் எப்படியாவது தனது பலத்தை நிரூபித்து அதிமுக என்றால் தான் மட்டும் தான் என்று மக்கள் மன்றத்தில் நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருகிறார். ஒரு இடைத்தேர்தலுக்கு இவ்வளவு இறக்கணுமா என்று மாஜிக்கள் பலரும் புலம்பும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

ஒதுங்கிக் கொண்ட ஓபிஎஸ்இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு வாங்கியதோடு, பாஜக உள்ளிட்ட அத்தனை கூட்டணிக் கட்சிகளையும் தனது தலைமையின் கீழ் ஒருங்கிணைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இரட்டை இலை சின்னத்துக்கு பிரச்சாரம் செய்வோம் என்று ஆரம்பத்தில் கூறிய ஓபிஎஸ் அணி தற்போது அறிக்கை மூலம் மட்டுமே ஆதரவளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக சொல்கிறார்கள்.
எடப்பாடிக்கு நிகழ இருந்த பின்னடைவு!ஒருவேளை இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் இரு அணிகளும் சுயேட்சை சின்னத்தில் நின்றிருந்தால் எடப்பாடி பழனிசாமி அணிக்கு பின்னடைவாக இருந்திருக்கும் என்று களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி அணி பிரச்சாரத்தை ஆரம்பத்திலேயே முடுக்கிவிட்டிருந்த போதும், ஓபிஎஸ்ஸுக்கு செல்வாக்கான பகுதி இல்லை என்ற போதும், அவரது வேட்பாளர் தொகுதியில் அறிமுகமில்லாதவராக இருந்த போதும் எவ்வாறு எடப்பாடிக்கு டஃப் கொடுத்திருப்பார் என்று விசாரித்தால் முக்கிய தகவல் ஒன்றை கூறுகின்றனர்.
கேப்பில் கோல் போட பார்த்த ஓபிஎஸ்அதிமுக சார்பில் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டுள்ளார், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார், இவர் கன்னட நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர். தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் செங்குந்த முதலியார் சமூகத்தை பிரதான கட்சிகள் புறக்கணித்ததாக அச்சமூக சங்கத்தினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இதனால் ஓபிஎஸ் தனது அணி சார்பாக முதலியார் சமூகத்தைச் சேர்ந்த செந்தில் முருகனை நிறுத்தியிருந்ததால் குறிப்பிட்ட வாக்குகளை பெற்றிருக்க முடியும் என்கிறார்கள்.
கொங்கு மண்டலத்துக்குள் நுழைய திமுகவுக்கு முதல் படி!திமுக சார்பில் சபரீசனை அனுப்பி முதலியார் சமூகத்தவர்களை சந்திக்க வைத்து அவர்களது கோரிக்கைகளை பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமி உஷாராகியுள்ளது. திமுகவுக்கு அந்த வாக்கு வங்கி சென்றால் அது இந்த தேர்தலில் மட்டுமல்லாமல் அடுத்து வரும் தேர்தலிலும் எதிரொலிக்கும். கொங்குவில் கொஞ்சம் கொஞ்சமாக திமுக ஊடுருவ அது வாசலாக அமைந்து விடும். எனவே இதை ஆரம்பத்திலேயே தடுத்தாக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்துகிறார்.
செங்கோட்டையனுக்கு கொடுத்த அசைன்ட்மென்ட்!​​
ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் பணிக்குழு தலைவராக உள்ள செங்கோட்டையனை தொடர்பு கொண்ட எடப்பாடி பழனிசாமி, முதலியார் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சில சர்ப்ரைஸ்களை அளிக்கச் சொல்லி உத்தரவிட்டாராம். அதன்படி செங்கோட்டையனும் நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இரு தரப்பும் தங்கள் தரப்பை அணுகியதால் குஷியாகியுள்ள முதலியார் சங்க நிர்வாகிகள் எந்த பக்கம் வாக்குகளை திருப்பி விடுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.