செல்வமகள் சேமிப்பு திட்டம்: 2 நாட்களில் 11 லட்சம் கணக்குகள் தொடக்கம்

புதுடெல்லி: செல்வமகள் சேமிப்பு (சுகன்ய சம்ரிதி) திட்டத்தில் கடந்த வாரத்தில் 2 நாட்களில் மட்டும் 11 லட்சம் கணக்குகள் தொங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பெண் குழந்தைகள் நலனுக்காக செல்வமகள் சேமிப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015 ஜனவரி மாதம் தொடங்கி வைத்தார். இதர சேமிப்பு திட்டங்களைவிட செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு வழங்கப்படும் வட்டி பலன் அதிகம் என்பதால் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோரிடையே இத்திட்டத்துக்கு அதிக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அதன் பயனாக, கடந்த பிப். 9, 10 ஆகிய 2 நாட்களில் மட்டும் இத்திட்டத்தில் 11 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் தொடங்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளில் 2.7 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த இமாலய சாதனைக்காக இந்திய அஞ்சல் துறைக்கு ட்விட்டரில் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.