புதுடெல்லி: குஜராத், குவாஹாட்டி உட்பட 4 உயர் நீதிமன்றங்களுக்கு புதியதலைமை நீதிபதிகள் நியமிக்கப் பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய சட்டஅமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியஅரசியலமைப்பு சட்ட விதிகளின்படி கீழ்க்கண்ட நீதிபதிகள் பல்வேறு உயர் நீதிமன்ற தலைமைநீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள னர். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு கீழ் 4 நீதிபதி களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள சோனியா கிரிதர் கோகானி, குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிசந்தீப் மேத்தா, குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்வந்த் சிங், திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குவாஹாட்டி உயர்நீதிமன்ற நீதிபதி என்.கோடீஸ்வர் சிங் ஜம்மு-காஷ்மீர் மற்றும்லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.