கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியானது. பல வருடங்களுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே தினத்தில் வெளியானதால் எங்கு திரும்பினாலும் இவ்விரு நடிகர்களை பற்றிய பேச்சு தான் இருந்தது.
இதையடுத்து இரண்டு படங்களும் வெளியாகி லாபகரமான படங்களாக அமைந்தது. இதன் பிறகாவது அஜித் மற்றும் விஜய் பற்றிய பேச்சுக்கள் குறையும் என்று பார்த்தல் தற்போது மேலும் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றன. ஒருபக்கம் விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகும் லியோ படத்தை பற்றிய பேச்சுக்கள் போய்க்கொண்டிருக்கையில் மறுபக்கம் AK62 சர்ச்சைகள் ஓடிக்கொண்டிருக்கிறது.
Rajini: ஒரு நாள் கால்ஷீட்டிற்கு இத்தனை கோடி சம்பளமா ? சாதனை படைத்த சூப்பர்ஸ்டார்..!
விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என கடந்தாண்டு அறிவிப்பு வந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். விக்னேஷ் சிவனின் கதையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் அவர் நீக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
கூலிங் கிளாசுடன் மாஸாக வந்த மோகன்லால்!
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதையடுத்து AK62 திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் என்பது உறுதியானாலும் இதனை பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. மகிழ் திருமேனிக்கு அஜித் பல கண்டிஷன்களை போட்டு வருவதால் தான் AK62 அறிவிப்பு வெளியாக தாமதம் ஏற்படுவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இந்நிலையில் மகிழ் திருமேனி விஜய்க்காக உருவாக்கிய கதையை தான் அஜித்திடம் கூறியுள்ளார் என்றும், விஜய்யின் கதையில் அஜித் நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன. விஜய்யின் 65 ஆவது திரைப்படத்தை மகிழ் திருமேனி தான் இயக்கப்போவதாக இருந்தது. மேலும் மகிழ் திருமேனி சொன்ன கதையும் விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆனால் சில காரணங்களால் அப்படம் நடக்காமல் போனது. இதையடுத்து தற்போது மகிழ் திருமேனி விஜய்க்கு சொன்ன கதையில் சில மாற்றங்களை செய்து அஜித்திடம் கூறியதாகவும், அக்கதை தான் AK62 திரைப்படமாக உருவாகப்போவதாகவும் பேசப்பட்டு வருகின்றது. இருப்பினும் இது உண்மையா இல்லை வெறும் வதந்தியா என்பது தெரியவில்லை.