மலையக சமூகத்தின் 'ஆதர்ஷ சிற்பி' – கவிதை, கட்டுரை போட்டிகள்

மலையக சமூகத்தின் ‘ஆதர்ஷ சிற்பி’ அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன, சிரார்த்த தினத்தை முன்னிட்டு கவிதை கட்டுரை போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மலையக சமூகத்தின் அரசியல், தொழிற்சங்க நகர்வுகள் அதிரடியானவை, ஆச்சரியப்பட வைப்பவை, எண்ணியதை எடுத்துச் சொல்ல என்றுமே தயங்காத தலைவர் என மூத்த பத்திரிகையாளரும், இ.தொ.கா  சிரேஷ்ட ஊடக இணைப்பளாருமான தேவதாஸ் சவரிமுத்து தெரிவித்துள்ளார்.

சுயநல அரசியலுக்கப்பால் கொள்கை அரசியலை முன்னெடுத்து புதிய கலாசாரத்தை வளர்ப்பதிலும், மலையக சமூக மாற்றத்திற்கும், விழிப்புணர்வுக்கும் இறுதி மூச்சுவரை இடையராது உழைத்து வந்தவர். இளைய தலைமுறையினருக்கு ஆதர்ஷமாக தடம் பதித்தவர் அவரின் ஆளுமையும், அர்ப்பணிப்பும் நாளைய மலையகத்தின் நகர்வுகளுக்கான உந்துதல்களாக அமைய வேண்டும் என்ற இலக்கின் ஒரு அங்கமாக இப்போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கவிதைக்கான தலைப்புகள்.

 தடம் பதித்த தானைத் தலைவன்
 இலக்கு நோக்கி இனிய பயணத்தில் ஆறுமுகன் தொண்டமான்
 பாட்டாளி விடுதலையின் கூட்டாளி
 தலைவரது புகழைச் சொல்ல நாள் போதுமா
 உழைப்போருக்கு தோழன்இ ஏய்த்து பிழைப்போருக்கு…

கட்டுரைக்கான தலைப்புகள்

 ஆளுமையின் அடையாளம் அமரர் ஆறுமுகன் தொண்டமான்
 இன்றைய மலையகத்தின் இனிய நினைவுகளில் அவர்
 அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் பாதை
 இளைய தலைமுறையின் இங்கிதமான வழிகாட்டி
 சமூக எழுச்சிக்கு வித்திட்ட வீர மகன்

போட்டிகளின் விதிமுறைகள்

 திறந்த போட்டி
 நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
 கவிதை 150 சொற்களுக்குள்ளும்இ கட்டுரை 800 சொற்களுக்குள்ளும் உள்ளடங்கி இருக்க வேண்டும்.
 படைப்புகள் யு4 தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதப்பட வேண்டும். பெயர்இ முகவரி தனியாக ஒரு தாளில் எழுதப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.
 ஏற்கனவே அச்சு, இலத்திரனியல் ஊடகங்களில் வெளியானவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் படைப்புகளுக்கு சன்மானமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு அவை தேசிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும்.

படைப்புக்களை 15.03.2023 க்கு முன்னர் பதிவுத் தபாலில் போட்டி ஏற்பாட்டாளர், இ.தொ.கா. இல 72. ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு:  071-6876 548 / 070-4329 131

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.