வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இன்று (பிப்.,13) 2 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இதனால் 9 மாதங்களுக்கு பின் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கையான 34யை அடைந்தது.
தலைமை நீதிபதியுடன் சேர்த்து, 34 நீதிபதிகள் செயல்பட வேண்டிய சுப்ரீம் கோர்டில், கடந்த பிப்.,6ம் தேதி புதிதாக பதவியேற்ற 5 நீதிபதிகளுடன் சேர்த்து, 32 நீதிபதிகளாக எண்ணிக்கை உயர்ந்தது.
இச்சூழலில், அலகாபாத் உயர்நீதிமன்ற கோர்ட் நீதிபதி ராஜேஷ் பிண்டால், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க, சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ‛கொலீஜியம்’ பரிந்துரைத்தது.
இதையடுத்து கொலீஜியம் பரிந்துரையை ஏற்று 2 பேரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுப்ரீம் கோ்ரட் நீதிபதியாக, ராஜேஷ் பிண்தால் மற்றும் அரவிந்த் குமார் ஆகிய 2 பேர் இன்று(பிப்.,13) பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனால் 9 மாதங்களுக்கு பின் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கையான 34யை அடைந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement