பீகார்: பீகார் மாநிலத்தில் மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குவாரி உரிமையாளர் காரை தீ வைத்து கொளுத்தி ரகளையில் ஈடுப்பட்டனர். கயா அருகே ஓடும் மொகர ஆற்றின் கரையில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு லாரிகளில் மணல் எடுத்து செல்லப்படுகிறது.
இந்நிலையில், பெல்வார் கிராமத்தில் அமைக்கப்பட்ட குவாரியை முற்றுகையிட்ட கிராம மக்கள் அளவுக்கு அதிகமாக மணல் வெட்டி எடுக்கப்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு மணல் குவாரி உரிமையாளர் பதில் கூற முன்வராமல் போனதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவரது வாகனத்தை தீ வைத்து கொளுத்தினர். இதனால், அந்த இடமே போர்க்களம் போன்று காட்சியளித்தது.