சேலம்: சேலத்தில் டிக்கெட் எடுக்காமல் ரயிலின் முன்பதிவு பெட்டியில் பயணித்த 115 வடமாநில தொழிலாளர்களை ரயில்வே பாதுகாப்பு போலீசார் பாதி வழியில் இறங்கிவிட்டனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் பயணிப்பதாக சேலம் ரயில்வே கோட்டம் அலுவலகம் கட்டுப்பாட்டு அறைக்கு பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து ரயில்வே பாதுகாப்பு போலீசார் தின்னப்பட்டி ஸ்டேஷனில் ரயிலை நிறுத்தி டிக்கெட் பரிசோதகர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது முன்பதிவு செய்திருந்த பயணிகள் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகள் குறித்து புகார் அளித்தனர். இதனை அடுத்து டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் பயணித்த 25 பெண்கள் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் 115 பேரை ரயில்வே போலீசார் நடுவழியில் இறங்கிவிட்டனர். பின்னர் அவ்வழியாக வந்த ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.