பூக்கள் விலை 4 மடங்கு உயர்வு..!!

 ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.காதலர்களுடன் காதலர் தினத்தைக் கொண்டாடுகின்றனர். ஆனால் வேலண்டைன்ஸ் டே மட்டுமே காதலர் தினமல்ல. அதற்கு ஒருவாரம் முன்பிருந்தே அதற்கான கொண்டாட்டம் தொடங்கிவிடுகிறது.

ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே மற்றும் கிஸ் டே போன்றவற்றையும் கொண்டாடுகிறார்கள். இந்த தினங்களுக்கு எனத் தனிச்சிறப்பு உண்டு.

காதலர்களின் கொண்டாட்டமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று காதல் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் இந்த நாளைக் கொண்டாடுவதன் மூலம் தங்களது வாழ்வின் மறக்கமுடியாத தினத்தை இவர்கள் அன்று உருவாக்குகிறார்கள்.

இந்த காதலர் தினத்தில் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை பகிர்ந்து அளித்தும் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.இந்த நிலையில் நாளை காதலர் தினத்தை ஒட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தையில் ஸ்டெம் ரோஜா பூக்களபூக்களின் 4 மடங்கு உயர்ந்துள்ளது. ஸ்டெம் ரோஜா பூக்கள் கட்டு ஒன்று ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.550 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.