அமெரிக்காவில் துருக்கி தூதரகத்திற்குள் நுழைந்த அனாமதேய நபர் ஒருவர், கிட்டத்தட்ட 1100 கோடி ரூபாயை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக கொடுத்துச் சென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அநாமதேய நபர் ஒருவர் துருக்கிய தூதரகத்திற்குள் நுழைந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 மில்லியன் டொலர்களை (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.1100 கோடி) நன்கொடையாக அளித்ததாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ட்விட்டரில் இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், பாகிஸ்தானிய குடிமகனாகக் கூறப்படும் நபரின் கருணையால் நெகிழ்ந்த்தாக எழுதினார்.
AP
மேலும், “இவை மனிதநேயத்தின் பறைசாற்றும் செயல்களாகும், இது மனிதகுலத்தை சமாளிக்க முடியாத முரண்பாடுகளில் வெற்றிபெற உதவுகிறது” என்று அவர் கூறினார்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சேகரிக்கவும் நிவாரணம் வழங்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் கடந்த வாரம் ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளதாக துருக்கியின் அரசு நடத்தும் ஊடக நிறுவனமான அனடோலி ஏஜென்சி தெரிவித்துள்ளது.
AP
சனிக்கிழமையன்று, பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், துருக்கியின் “சகோதரி மற்றும் சகோதரர்களுக்கு” மேலும் இரண்டு நிவாரணப் பொருட்கள் பறந்து வருவதாக ட்விட்டரில் பொதுமக்களுக்கு அறிவித்தது.
இயற்கை பேரிடரில் பலியானோர் எண்ணிக்கை 33,000-ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை (UN) கணித்துள்ளது.