Oppo Find N2 Flip: சாம்சங் Flip போன்களுக்கு போட்டியாக வரப்போகும் Oppo Flip!

சீனாவை சேர்ந்த ஒப்போ நிறுவனம் அதன் முதல் Flip N2 போனை பிப்ரவரி 15 அன்று வெளியிடுகிறது. இந்த போன் குறித்த டீசர் சமூகவலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போனை தொடர்ந்து 5 ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போன் பிலிப் டிசைன் அமைப்பு கொண்ட போன்கள் வரிசையில் வடிவமைக்கப்ட்டுள்ளது.

விலை எதிர்பார்ப்புகள் இந்த போன் 71,200 ஆயிரம் ரூபாய் விலையில் அதன் பேஸ் 8GB RAM 256GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போன் Purple, Black மற்றும் Flowing Gold ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்கள் கொண்டுள்ளது.

இந்த போன் Mediatek Dimensity 9000+ SoC சிப் கொண்டுள்ளது. இதில் 16GB RAM மற்றும் 512GB UFS 3.1 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இதில் MariSilicon X NPU Image Processing வசதி உள்ளது.

இதில் 32 MP செல்பி கேமரா, 50MP மெயின் கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைட் கேமரா வசதி உள்ளது. இதில் 4300mAh பேட்டரி மற்றும் 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இதன் எடை 191g மற்றும் 16mm அகலம் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பிலிப் போன்களுக்கு ஏற்றார் போலவே மிகவும் சிறிய காம்பாக்ட் டிசைன் கொண்டுள்ளது. மேலும் பிலிப் போன்களிலேயே இல்லாத அளவு மிப்பெரிய கவர் ஸ்க்ரீன் கொண்டுள்ளது.

இந்த பிலிப் போனில் Foldable AMOLED, 120HZ HDR10+ டிஸ்பிலே வசதி, 1600 Nits பிரைட்னஸ் அளவு, 86.4% ஸ்க்ரீன், 1080×2520 Pixels, 403ppi, Corning Gorilla Glass 5 பாதுகாப்பு போன்றவை உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.