ஈரோடு: பாரதிய ஜனதாவுக்கு அதிமுக கொத்தடிமையிலும் கொத்தடிமையாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் மீண்டும் கடுமையாக விமர்சித்தார். அதானி விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசை கண்டித்து முத்தரசன் தலைமையில் ஈரோட்டில் போராட்டம் நடைபெற்றது. பின்னர், பேட்டியளித்த முத்தரசன்; பாரதிய ஜனதாவுக்கு அதிமுக அடிமையாக இருக்கிறது என்று சாடினார். பாரதிய ஜனதாவுக்கு கொத்தடிமையிலும் கொத்தடிமையாக அதிமுக உள்ளது என்று மீண்டும் சாடியுள்ளார்.
திமுக-வுக்கு இடது சாரிகள் உள்பட அதன் கூட்டணி கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளன என்று நேற்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இது தொடர்பாக, மீண்டும் பதில் அளித்துள்ள முத்தரசன் வேட்பாளரையே பாரதிய ஜனதாவை கேட்டு முடிவு செய்யும் நிர்பந்தத்தில் தான் அதிமுக இருக்கிறது என்று குறிப்பிட்டார். அறிவிப்பு இல்லாத 8 வழிச்சாலை பற்றி பேசி பிரச்சனைகளை திசை திருப்ப எடப்பாடி முயற்சிப்பதாகவும் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.