இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல பணம் கேட்ட மருத்துவமனை! திடீரென உயிருடன் எழுந்த நபர்


இந்திய மாநிலம் பஞ்சாப்பில் பணம் கொடுத்துவிட்டு இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லுமாறு மருத்துவமனை கூறிய நிலையில், குறித்த நபர் உயிருடன் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடல்நலம் பாதிப்பு

பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டத்தில் உள்ள நங்கால் ஷாகீத் கிராமத்தைச் சேர்ந்தவர் பகதூர் சிங்.

இருமல் தொற்றால் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அவரை, உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சில மணிநேரங்களில் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

மேலும் அவரது உடலை எடுத்துச் செல்ல பணம் செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் பகதூர் சிங்கின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளது.

இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல பணம் கேட்ட மருத்துவமனை! திடீரென உயிருடன் எழுந்த நபர் | Man Alive After Hospital Declared Death

@Getty Images

அப்போது பகதூரின் உடல் அருகே சென்றபோது லேசான இயக்கம் காணப்பட்டது.

இதனால் உடனடியாக உறவினர்கள் அவரை தூக்கிக்கொண்டு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு சென்றுள்ளனர்.

உயிருடன் இருந்த நபர்

அங்கு அவரை பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில மணிநேரங்களில் பகதூருக்கு சுயநினைவு திரும்பியது.

அதன் பின்னர் தனியார் மருத்துவமனையின் முன்பு திரண்ட பகதூரின் உறவினர்கள், மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் இறங்கினர்.    

இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல பணம் கேட்ட மருத்துவமனை! திடீரென உயிருடன் எழுந்த நபர் | Man Alive After Hospital Declared Death



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.