ஃபிட்மென்ட் ஃபேக்டர்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி வருகிற மார்ச் மாதத்தில் நல்ல செய்தி கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. உண்மையில், அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக டிஏ உயர்வை எதிர்பார்த்து வருகின்றனர். இது தவிர, ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்தும் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். மறுபுறம் அதே மக்கள் சம்பள திருத்தத்தையும் எதிர்பார்த்து அமர்ந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய அந்த மூன்று விஷயங்களைப் பற்றித்தான் இன்று நாம் காண உள்ளோம்.
7வது சம்பள கமிஷன்
மத்திய அரசு ஊழியர்கள் 2023 ஆம் ஆண்டு ஹோலிக்குப் பிறகு மத்திய அரசிடமிருந்து சில பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். இதில் 7வது ஊதியக் குழு ஃபிட்மென்ட் ஃபேக்டர், அகவிலைப்படி (டிஏ) உயர்வு மற்றும் ஊதிய திருத்தம் ஆகியவை அடங்கும். சமீபத்தில், மத்திய அரசு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு அல்லது (HRA) விதியையும் புதுப்பித்துள்ளது.
ஊதிய திருத்தம்
இதனிடையே 8வது ஊதியக் குழு அமைக்க இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதாகவும், இதை கருத்தில் கொண்டு சம்பள திருத்தத்திற்கான புதிய பார்முலாவை அரசு அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 2023 ஆம் ஆண்டு ஹோலிக்குப் பிறகு இந்த பெரிய நிகழ்வு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபிட்மென்ட் ஃபேக்டர்
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 2023 ஹோலிக்குப் பிறகு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, ஏனெனில் நிலுவையில் உள்ள ஃபிட்மென்ட் காரணி உயர்வு குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும். ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்புக்குப் பிறகு, அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியமும் 18,000 ரூபாயில் இருந்து 26,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு ஊழியர்கள் ஃபிட்மென்ட் காரணி அடிப்படையில் சம்பளம் பெறுகிறார்கள், தற்போது ஃபிட்மென்ட் காரணி 2.57 சதவீதமாக உள்ளது. அதன் படி தற்போது ஃபிட்மென்ட் பேக்டரை 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரி வருகின்றனர்.
டிஏ-டிஆர்
2023ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) மத்திய அரசு உயர்த்தலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியதால், அகவிலைப்படியை 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தியது. அதேபோல் இந்த மார்ச் மாதத்தில், அரசாங்கம் 4% DA ஐ அதிகரிக்கலாம். மேலும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியையும் (டிஆர்) அரசு உயர்த்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.