யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.

இந்திய வனப் பணி தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர். இந்திய வனத்துறையில் உள்ள முக்கிய பதவிகளுக்கு இத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு சிவில் சர்வீஸ் தேர்வைப் போல் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளில் நடைபெறும்.

பணியின் பெயர்: Indian forest service examination

காலிப்பணியிடங்கள்: 150

கல்வித் தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 21.13.2023

இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.