கோவில் திருவிழாவில் நடந்த பயங்கரம்!! திடீரென வெடித்து சிதறிய பாய்லர்… 3 பேர் காயம்..!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. பிரம்மராம்பா சமேத மல்லிகார்ஜுன சுவாமி கோவில் ஆன அந்த கோவிலுக்கு பெருமளவில் பக்தர்கள் வருவது வழக்கம். அங்கு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பிரம்மோற்சவ துவக்க நாளான நேற்று முன்தினம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அமைக்கப்பட்டிருக்கும் சமையல் கூடத்திற்கு வெளியே இருந்த பாய்லர் திடீரென்று வெடித்து விபத்து ஏற்பட்டது. சாதம் சமைப்பதற்காக தண்ணீரை ஆவியாக்கி சமையல் அறைக்கு அனுப்புவதற்காக அங்கு ராட்சத பாய்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஒரு பாய்லர் வெடித்து ஊழியர்கள் 2 பேர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை உடனடியாக கோவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிரம்மோற்சவ துவக்க நாளன்று நடைபெற்ற விபத்து காரணமாக கோவில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஸ்ரீசைலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.