விடுதலை புலி பிரபாகரன் உயிருடனில்லை! பழ நெடுமாறனை மறுக்கும் இலங்கை ராணுவம்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பழ. நெடுமாறன் கூற்றை உறுதியாக மறுக்கிறது இலங்கை ராணுவம். இது தொடர்பாக அரசியல் அரங்கில் பல்வேறு சர்ச்சைகள் தொடங்கிவிட்டன. தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொன்னார்.

அப்போது அவர் தெரிவித்த கருத்துகள், தற்போது உலகம் முழுவது வைரலாகிறது. அப்படி அவர் என்ன சொன்னார்?  சர்வதேச சூழலும் ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக வெடித்து கிளம்பிய இலங்கை மக்களின் போராட்டம் உச்சகட்டத்தில் இருக்கும் இந்த சூழலில் தமிழ் தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலை உருவாகி உள்ளது என்று பழ நெடுமாறன் தெரிவித்தார்.

இந்த சூழலில் தமிழின தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுதும் தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று தீயைக் கொழுத்திப் போட்டார் பழ நெடுமாறன் அவர்கள்.

மேலும் படிக்க | மதுரை மக்கள் செங்கல்லை எடுக்க போறாங்க! கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்! 

அத்துடன், அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பிய யூகங்களுக்கும் – ஐயங்களுக்கும் இந்தச் செய்தி மூலம் உறுதியான முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன் என்றும், தமிழின மக்களின் விடுதலைக்கான திட்டத்தினை அவர் விரைவில் அறிவிக்க இருப்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

பழ நெடுமாறனின் இந்தக் கூற்றை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது என்ற செய்தியை பிபிசி ஊடகம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஆழமாக கால் ஊன்றி இந்தியாவுக்கு எதிரான களமாக மாற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்து மகாகடலின் சீனாவின் ஆதிக்கம் செலுத்தும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதனை தடுக்கும் வகையில் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் இந்திய அரசு என பல்வேறு விஷயங்களை இந்த செய்தியாளர் கூட்டத்தில் பழ நெடுமாறன் பேசியிருந்தாலும், விடுதலைப்புலிகள் தலைவர் பிராபகரன் உயிருடன் இருப்பதாக வெளிப்படையாக பேசியது சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு இல்லாமல் பொருள் வாங்கலாம்; தமிழக அரசின் குட் நியூஸ்

எனவே, பிபிசி செய்தி நிறுவனம்,பிரபாகரன் நலமுடன் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து இலங்கை ராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு கிடைத்த பதிலையும் வெளியிட்டுள்ளது.

 “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது” என பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

“2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார். அதற்கான டி.என்.ஏ ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதியன்று இறுதிக்கட்ட யுத்தத்தில் அவர் கொல்லப்பட்டார்” என்று இலங்கை ராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | விடுதலை புலிகள் பிரபாகரன் உயிருடன் உள்ளார் – பழ நெடுமாறன் சர்ச்சை பேட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.