Vijay wife Sangeetha: விஜய்யின் காதல் மனைவியான சங்கீதா ரொம்ப கொடுத்து வைத்தவர் என தளபதி ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
காதலர் தினம்காதலர் தினத்தை கொண்டாட காதலர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காதலை சொல்லாதவர்கள் தங்கள் மனதில் இருப்பதை எப்படி சொல்வது என லைட்டா டென்ஷனில் இருக்கிறார்கள். காதலை சொல்லி உறுதி செய்தவர்களோ, நாளைய பொழுதை எப்படி ஸ்பெஷலாக கழிப்பது என திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தளபதி விஜய் மற்றும் அவரின் மனைவி சங்கீதா பற்றி தளபதியன்ஸ் பேசி வருகிறார்கள்.
Vignesh Shivan:கிஸ் டேவில் வைரலாகும் விக்னேஷ் சிவன், நயன்தாரா முத்த போட்டோ
ரசிகை48 வயதிலும் வாலிபர் போன்று இருக்கிறார் விஜய். அவர் இளம் வயதில் இருந்தபோது விஜய்யை திருமணம் செய்து கொள்ள பல ரசிகைகள் ஆசைப்பட்டார்கள். எத்தனையோ ரசிகைகள் ஆசைப்பட அந்த பாக்கியம் ரசிகை சங்கீதா சொர்ணலிங்கத்திற்கு கிடைத்தது. விஜய்யின் ரசிகை தான் லண்டனை சேர்ந்த சங்கீதா. அவரை பார்த்து பேசிய விஜய்க்கு சங்கீதாவை மிகவும் பிடித்துவிட்டது.
திருமணம்விஜய்யும், சங்கீதாவும் தங்களின் காதலை வீட்டில் சொல்லி பெற்றோரின் ஆசியுடன் கடந்த 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் இருக்கிறார்கள். மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும் என்று பூவே உனக்காக படத்தில் பாடினார் விஜய். நிஜத்தில் அது அவருக்கு நடந்துவிட்டது.
ஹீரோபல பெண்கள் ஒரு பெரிய ஹீரோவை காதலிப்பதும், அவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புவதும் உண்டு. ஆனால் அந்த ஹீரோவையே தன் கணவராக பெற்ற பாக்கியம் சங்கீதாவுக்கு தான் கிடைத்திருக்கிறது. சங்கீதா அண்ணி ரொம்ப கொடுத்து வைத்தவர். அண்ணன் போன்ற ஏகப் பத்தினி விரதன் கணவராக கிடைத்திருக்கிறார் என விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இளமைAjith, Vijay: விஜய்க்கு லோகேஷ் செஞ்சுடுவாரோனு பயந்ததை அஜித் செஞ்சுட்டாரேவிஜய் மட்டும் அல்ல சங்கீதாவும் கல்யாணம் ஆன புதிதில் இருந்தது போன்றே தற்போதும் இளமையாக இருக்கிறார். மகள் திவ்யா சாஷாவுக்கு அக்கா மாதிரி இருக்கிறார் சங்கீதா. இளமையாக இருப்பது எப்படி என்று யார், யாரிடம் எல்லாமோ கேட்கிறார்கள். அந்த கேள்வியை சங்கீதா அண்ணியிடம் அல்லவா முதலில் கேட்க வேண்டும் என்கிறார்கள் தளபதியன்ஸ்.
ரசிகர்கள்காதலர் தினம் வந்தாலே எங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது விஜய்ணா, சங்கீதா அண்ணியின் காதல் கதை தான். அந்த வெற்றிகரமான காதலை என்றுமே மறக்க முடியாது. அண்ணனும், அண்ணியும் இன்று போன்று என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.